நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை

" alt="" aria-hidden="true" />

 

சென்னை,

 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.




 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை இன்று நள்ளிரவு முதல் வரும் 31ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.  எனினும், சரக்கு ரெயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.




 

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது.

 

இதேபோன்று தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வருகிற 31ந்தேதி வரை நிறுத்தப்படுகிறது.

 

எனினும், தமிழகத்தில் நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது


Popular posts
நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது
Image
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:
Image