பரிசோதனை முயற்சியாக இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தில் 32 பேர் உட்கார்ந்து கொண்டும், 25 பேர் வரை நின்று கொண்டு செல்ல முடியும். பேட்டரி ஸ்வேப்பிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த பேருந்தில் இரு பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பேட்டரியை ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 50 கி.மீ வரை இயக்க முடியும்.
4 கி.மீ-க்கு ஒருமுறை பேட்டரி ஸ்வேப்பிங் செய்வதன் மூலம், இந்த பேருந்தை ஒரே இயக்கத்தில் அதிகப்பட்சமாக 20 கி.மீ வரை இயக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்தது.
தமிழக அரசின் மின்சார பேருந்தில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலி பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.